Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பார்த்து மிரண்ட பிரபல நடிகர்! என்ன கூறினார் தெரியுமா?

அஜித் எங்கு சென்றாலும் எது செய்தாலும் அதில் ஒரு சுவாரசியமான செய்தி இருக்கும். அது அவரிடம் பழகுபவர்க்கும் அவர் கூட நடிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
மேலும் விசுவாசம் படத்தின் செய்தி எப்ப வரும் எப்படி இருக்கும் என அஜித்தின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் பொங்கல் ரிலீஸ் என தடால் என அறிவித்தது படக்குழு.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தெலுங்கு சினிமா நடிகர் சத்ரபதி சேகர் நடித்துள்ளாராம். ஒரு பேட்டியில் அவர் அஜித் குறித்தும், படம் பற்றியும் பேசியுள்ளார்.
மேலும் விசுவாசம் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். பெரிய நடிகர் சின்ன நடிகர் என்ற வித்தியாசம் இல்லாமல் அவர் அனைவரிடமும் பழகும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறதாம். அனைவரையும் வணக்கம் வைத்து வரவேற்பார். அவர் ஷூட் முடிந்தாலும் அனைவரின் நடிப்பையும் பார்த்து பாராட்டுவார் என கூறினார். இதுவரை இரண்டு முறை பிரியாணி செய்து அனைவர்க்கும் பரிமாறுவார் என தெரிவித்தார்.
