ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 16, 2025

விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ்க்கு இவ்வளவு அழகான மனைவியா.! திருஷ்டி சுத்தி போடுங்க ப்ரோ

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளரான ஈரோடு மகேஷ் ஸ்டேண்டர்ட் அப் காமெடிக்கு பிரபலமானவர். இவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றதற்கு ஈரோடு மகேஷின் இலக்கண பேச்சுதான் காரணம்.

மேலும் இவர் மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர் மற்றும் மேடைப் பேச்சாளர் என்பதால் சுத்த தமிழில் இவர் செய்யும் காமெடிக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் மகேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், ‘ஈரோடு மகேஷுக்கு இவ்வளவு அழகான மனைவியா!’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது ஈரோடு மகேஷ் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சில படங்களில் நடிகராகவும் பன்முக திறமையாளராக விளங்குகிறார்.

erode-mahesh-cinemapettai

மேலும் பலரையும் சிரிக்கவைக்கும் ஈரோடு மகேஷின் அம்மாவால், தனது மகன் மகேஷ் எவ்வளவு அழகாக பேசி வியப்பில் ஆழ்த்துகிறார் என்பதை கேட்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் ஈரோடு மகேஷ் பிறந்ததிலிருந்தே அவரது குரலை அவருடைய அம்மா கேட்டதே இல்லையாம். இத்தகைய சோகக் கதையை அவர் பல மேடைகளில் கண்ணீர் மல்க பகிர்வதுண்டு.

erode-mahesh-1
erode-mahesh-1

Trending News