fbpx
Connect with us

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்… மக்களை திசை திருப்ப எடுத்த முயற்சியை தோற்கடித்த எடப்பாடியார்! 

Tamil Nadu | தமிழ் நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்… மக்களை திசை திருப்ப எடுத்த முயற்சியை தோற்கடித்த எடப்பாடியார்! 

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று முதல்வருக்கு கேள்வி எழுப்பி ‘தவளை தன் வாயால் கெடும்’ என்ற பொன்மொழியை உண்மையாக்கி உள்ளார்.

அதாவது 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.

இந்த நிலையில் தற்போது திமுக தூத்துக்குடி எம்பியான கனிமொழி ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு பணி குறித்த முடிவை இன்றாவது தூத்துக்குடி செல்லும் முதல்வர் எடுப்பாரா?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருக்கிறார்.

ஆனால் தூத்துக்குடியில் இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொண்டு, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அரசு சார்பாக இறந்த 13 பேர் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் கலவரத்தின்போது படுகாயமடைந்த ஆறு குகுடும்பத்திற்கும் சேர்த்து மொத்தம் 19 பேருக்கு வருவாய் துறை, சமூக நலத்துறை துறை, சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கியது  எடப்பாடியார் அரசு.

தற்போது இது எதுவுமே தெரியாமல், அதே தூத்துக்குடியில் எம்பியாக இருக்கும் கனிமொழி இவ்வாறு முதல்வரைப் பற்றி குறை கூறி பதிவிட்டு இருக்கும் பதிவைப் பார்த்த பலர், கனிமொழியை சமூகவலைதளங்களில் எள்ளி நகையாடி வருகின்றனர். மேலும் இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ‘தூத்துக்குடி திமுக எம்பிக்கு இந்த தகவல் தெரியாதா? அல்லது தெரிந்தும் முதல்வர் தூத்துக்குடி செல்லும் இன்றைக்கு மக்களை திசைதிருப்பும் வகையில் இந்த பொய் தகவலை டுவிட்டரில் பதிவிட்டாரா?’ என  பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் சமூக ஊடகத்தினர்.

Continue Reading
To Top