சென்னை: நடிகர் சத்யராஜ் பெயரில் துவங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இல்லை. பாகுபலி 2 படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ட்விட்டரில் உள்ள சிபியிடம் தான் சத்யராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சத்யராஜின் பெயரில் யாரோ ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கியுள்ளனர். இதை பார்த்த சிபி ட்விட்டரில் கூறியதாவது,

https://m.facebook.com/ActorSathyaraaj/ …அப்பா பெயரில் சர்ச்சை கருத்துகளை போஸ்ட் செய்யும் போலி பக்கம். இது குறித்து புகார் தெரிவிக்குமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

 

இதை பார்த்த பலரும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த போலி பக்கம் முடக்கப்பட்டுள்ளது.