fbpx
Connect with us

Cinemapettai

நாம் குடிப்பது ஒரிஜினல் சரக்கா? போலி சரக்கா? கண்டிபிடிக்க எளிதான முறை வந்துவிட்டது

wine-bottle

India | இந்தியா

நாம் குடிப்பது ஒரிஜினல் சரக்கா? போலி சரக்கா? கண்டிபிடிக்க எளிதான முறை வந்துவிட்டது

மதுபான கடைகள் தமிழ்நாடு மட்டுமின்றி பல இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஆனால் சமீபகாலமாக போலி மதுபானங்கள் கலந்து விற்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதனை எப்படி கண்டறிந்து கொள்வது என ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நீங்கள் வாங்கும் மதுவின் தரம் அந்தப் பாட்டிலேயே உள்ள பார் கோட் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காக ஒரு புதிய ஆப் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக டெல்லி அரசு சுங்க வரித்துறை இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் வாங்கும் மது பாட்டிலில் உள்ள பார்கோடு எண் குறிப்பிட்டால் மதுவின் தரமும் அதிலுள்ள கலப்படம் கண்டறிய முடியும் என கூறியுள்ளனர்.

போலி மதுபானங்கள் ஒழிப்பதற்காகவே இந்த நடைமுறையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தலைநகரமான டெல்லியிலேயே போலி மதுபானங்கள் விற்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியிலேயே அப்படி என்றால் நமது தமிழ்நாட்டில் சொல்லவா வேண்டும். இங்கு விற்பனையாகும் மது பாட்டில்களை எதற்கும் நீங்களும் ஒருமுறை செக் செய்யுங்கள், #mLiquorSaleCheck என்ற ஸ்மார்ட்போன் செயலின் மூலம் மதுபானத்தின் தரத்தை கண்டறிந்து பாருங்கள் என பலரும் கூறுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top