Tamil Cinema News | சினிமா செய்திகள்
தவறினால் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை..

ஐபிஎல் சீசனின் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு ஒரு விஷயத்தில் தவறு செய்தால் தண்டனை கொடுக்கப்படுவதாக சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஐபில் 10வது சீசனில் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு தொடரில் தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் மூன்று முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன் லீக் கோப்பை என்ற பெரிய அங்கீகாரத்தோடு களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே சரிவை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தும், எதிர்வரும் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றால் இந்த அணி ப்ளே ஆப்பிற்குள் களமிறமிங்கும் என்பதால் இன்னும் மும்பை கப்பை அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை கொண்டு இருக்கிறார்கள். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வீக்காக இருக்கும் இந்த அணி ஒன்று, இரண்டு போட்டியை வெல்வதற்கு பிட்னெஸ் தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சீனியரோ, ஜூனியரோ போட்டி இருந்தாலும், இல்லை என்றாலும் ஜிம்மில் பயிற்சி எடுக்க வேண்டும். எந்த காரணமும் கொண்டும் அதை தவிர்க்க முடியாது. அப்படி, தவறிய வீரர்களுக்கு ஒரு வினோதமான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி கலரான நீல நிறத்தில் அணி வீரர்களின் புகைப்படங்கள் எமோஜிகளாக பொறிக்கப்பட்டு இருக்கும். இதற்கு எமோஜி கிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மிஸ் செய்தால் இந்த ஜெர்சியுடன் தான் அந்த வீரார்கள் ஒருநாளை செலவிட வேண்டும். இதை இந்த நடப்பு தொடரில் முதல்முறையாக இஷான் கிஷன், அனுக்குள் ராய், ராகுல் சாஹர் ஆகியோர் பெற்று இருக்கின்றனர். தெரியாம மறந்துட்டோம் பாஸ் அதுக்கு இப்படி பண்ணிட்டாங்க என பீல் பண்ணி விட்டனர்.
இந்த ஜெர்சியை அணிந்து காமெடியாக இருக்கும் இவர்கள் வீடியோவை அவர்கள் அனுபவத்துடன் பதிவு செய்து மும்பை இந்தியன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. சென்னை போலவே அதிக ரசிகர்களை கொண்டுள்ள மும்பை அணி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரல் ஹிட்டாக்க தொடங்கி உள்ளனர்.
