Tamil Cinema News | சினிமா செய்திகள்
12 கிலோ எடை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய பகத் பாசில்.. மூன்றாவது முறையாக ஹிட் இயக்குனருடன் கூட்டணி
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகர். தமிழில் அவர் நடித்த வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற பகத் பாசில் நடித்த காட்சிகள் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
இது ஒருபுறமிருக்க மலையாளத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் மலையாளத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து கொண்டிருந்த பகத் பாசிலுக்கு மகேஷிண்ட பிரதிகாரம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அவரது மார்க்கெட்டை தூக்கி விட்டவர் திலீஷ் போத்தன்.
அதனைத் தொடர்ந்து தொண்டமுதிலும் திரிசாட்சியும் என்ற படத்திலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக திலீப் போத்தன் மற்றும் பகத் பாசில் கூட்டணியில் ஜோஜி என்ற படம் உருவாக உள்ளது.
இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 12 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்து வருகிறாராம் பகத் பாசில். அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகத் பாசில் நடிகை நஸ்ரியா நாசிம் என்பவரின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Fahadh-Faasil-weightloss-photo-cinemapettai
