உருகி உருகி நஸ்ரியாவை காதலித்தது இதனால் தான்.. 6 வருடங்கள் கழித்து பகத் பாசில் சொன்ன காரணம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் நஸ்ரியா நாசிம்(Nazriya Nazim). அவர் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்கள் மொத்த பெயரையும் கவர்ந்து விட்டார். எக்ஸ்பிரஷன் குயின் எனவும் ரசிகர்களால் அன்போடு அழைத்து வந்தனர்.

அதேபோல் மலையாள சினிமாவின் கமலஹாசன் ஆக வலம் வருபவர் பகத் பாசில்(Fahadh Faasil). எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து அனைவரது பாராட்டையும் பெறுவது தான் இவருக்கு வேலை.

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்யும் போது பாசிலை விட 12 வயது சிறியவர். இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் விழித்துக் கொண்டிருந்தனர். தற்போது பகத் பாஸில் அதற்கான காரணத்தை கூறியதால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். பெங்களூரு டேய்ஸ் என்ற படப்பிடிப்பில்தான் நஸ்ரியா மீது அவருக்கு காதல் ஏற்பட்டது.

அதுவரை பகத் பாசில் நடிக்கிறார் என்றால் அனைத்து நடிகர்களும் அவருக்கு ஜால்ரா அடிக்க தான் பார்ப்பார்களாம். ஆனால் நஸ்ரியா பகத் பாசில் என்ற ஒரு ஆளை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம். அவரும் சாதாரண மனிதர்தான் என்பதை போல இருந்தாராம்.

இதுவே பகத் பாசிலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. எப்படியாவது அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் பின்னர் காதலாக மாறியது என குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் அவஸ்தைப்பட்ட பகத் பாசில் இடம், அவருடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட நஸ்ரியா தானாகவே வந்து வெளியே செல்லலாமா என கேட்டுள்ளார்.

அதன் பிறகுதான் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.