Connect with us
Cinemapettai

Cinemapettai

pushpa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொட்டை தலை, கடா மீசை.. புஷ்பா படத்தில் கொடூர வில்லனாக பகத் பாசில்

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது. செம்மரக்கட்டை கடத்தல் கதைக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார். முதன்முதலாக அல்லு அர்ஜுன் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுதான் முதல் முறை.

ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் முற்றிலும் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் டீஸர் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது.

மேலும் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பகத் பாசில் கதாபாத்திரம் மற்றும் கெட்டப் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மொட்டை தலையுடன் கடா மீசை வைத்துக் கொண்டு காவல் அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்துள்ள போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இதுதான் இணையதள ட்ரென்டிங்.

fahadh-faasil-pushpa-movie-poster

fahadh-faasil-pushpa-movie-poster

Continue Reading
To Top