Connect with us
Cinemapettai

Cinemapettai

நாயகன், வட சென்னை படத்தின் காப்பியா.. பாஹத் பாசிலின் மாலிக் விமர்சனம்!

Reviews | விமர்சனங்கள்

நாயகன், வட சென்னை படத்தின் காப்பியா.. பாஹத் பாசிலின் மாலிக் விமர்சனம்!

பாஹத் பாசில் நடிப்பில்,  மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே எடுக்கப்பட்ட பிரம்மாண்ட ப்ரொஜெக்ட் தான் இந்த மாலிக். திரை அரங்க ரிலீஸ் என பல முறை தள்ளி சென்ற இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் சமீபத்தில் வெளியானது.

சுலைமான் என்ற வயதான முதியவராக பாஹத்  ஹஜ் செல்வதற்காக கிளம்புகிறார். விமான நிலையத்தில் போலீஸ் கைது செய்கின்றனர். அதுவும் பல வருடங்களுக்கு முன்பு உள்ள கேஸிற்காக, ரிமாண்டில் இருக்கும் இவரை ஜெயிலில் வைத்தே தீர்க்கத்துக்கட்ட ஆட்களை ரெடி செய்கிறது போலீஸ்.

யார் இந்த சுலைமான் அலி என்ற அறிமுகத்திற்கு பின் படத்தின் கதையை ஹீரோவின் அம்மா, மச்சான் மற்றும் ஹீரோவே சொல்வது போன்ற மூன்று பார்ட்டாக செல்கிறது திரைக்கதை. கேரளாவின் கடற்பகுதியில் உள்ள இரண்டு ஏரியா பற்றிய கதை. முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என இரண்டு மதம்,  அதன் பின் உள்ள அரசியல் என பல விஷயங்களை படத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர்.

கடலில் கடத்தல் செய்து வரும் ஹீரோ ஏன் கொலை செய்கிறார் என்பது தொடங்கி, தன் நண்பனின் தங்கை கிறிஸ்துவ பெண்ணை திருமணம் முடிப்பது, சூனாமி படுத்திய பாடு, நெடுஞ்சாலை ப்ரொஜெக்ட் என பல லேயர் கதையம்சம் உள்ள படம். என்ன தான் ஒரு தாதா தன் சமூகத்தினருக்கு நல்லது செய்ய முயன்றாலும், பலரின் எதிர்ப்பை எப்படி சம்பாதிக்கிறார் என காமித்துள்ளனர் இந்த படக்குழு.

fahad fasil in malik

சினிமாபேட்டை அலசல் – திரை அரங்க ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஒவ்வொரு பிரேமமும் செதுக்கியுள்ளார் இயக்குனர் மகேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷனு வர்கீஸ், சுஷின் ஷியாம் இசை பக்கபலம். ஹீரோ பாஹத் மட்டுமன்றி மனைவி ரோலில் நிமிஷா சஜயன், கலெக்ட்டராக ஜுஜு ஜார்ஜ், நண்பனாக வினய் போர்ட், அரசியல் செய்யும் அபூவாக திலேஷ் போத்தன் என அணைத்து கதாபாத்திரங்களின் அமைப்பும் அருமை. என்னதான் பல விஷயங்களை படத்தில் காமித்திருந்தாலும்,  மறைமுகமாக வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் அதிகம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் –  ஹாலிவுட்டின் கா ட் பாதர் படம் போல மூன்று பார்டுகளாக எடுக்கும் சமாச்சாரம் பல உள்ளது. நாயகன், வட சென்னை போன்ற படங்களை நினைவு படுத்தினாலும் இந்த மாலிக் கலக்கிவிட்டான் என்பதே நிஜம்.

சினிமாபேட்டை ரேட்டிங்  3 /5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top