Faf Du_RPS_IPLT20

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ் இடம்பிடித்திருந்தார். அந்த அணி ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டான் கிறிஸ்டியன், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுவதால் டு பிளிசிஸ்-க்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்திருந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மே 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது தென்ஆப்பிரிக்கா பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

புனே அணியில் வெளியில் இருப்பதால் தென்ஆப்பிரிக்காவின் அணியில் இணைய டு பிளிசிஸ் முடிவு செய்துள்ளார். இதனால் புனே அணியில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியின் தலைமையில் டு பிளிசிஸ் அனைத்து போட்டிகளிலும் இடம்பிடித்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.