பேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகின்றது.

அத்துடன் நின்றுவிடாது தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மூளையில் ஒரு விஷயத்தை நினைக்கும்போதே கணினியில் தட்டச்சு ஆகக்கூடிய வகையிலும், ஒலிகளை தோலினால் உணரக் கூடிய வகையிலும் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  கூகுளுடன் கைகோர்த்த Xiaomi! பிரம்மாண்டமான Android O அப்டேட்..

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனர் மார்க் ஷுக்கர்பேர்க் வெளியிட்டுள்ளார். இதற்காக Building 8 எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  ஃபேஸ்புக்கில் இதெல்லம் புதுசு! உங்களுக்கு தெரியுமா?

இத் திட்டத்தில் Regina Dugan என்பரை தலைமை அதிகாரியாக உள்ளடக்கிய 60 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு பணியாற்ற தயாராக உள்ளது.

மேலும் இத் தொழில்நுட்பத்தின் பயனாக  ஒரு நிமிடத்தில் 100 சொற்களை தட்டச்சு செய்யக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.