இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பிரபல பேஸ்புக் நிறுவனம் சுமார் 43 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஜியோ நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஜியோ சிம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி சந்தைகளில் பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவால் விடுத்து பல கம்பெனிகளை வேரோடு சாய்த்து விட்டது.
அதேபோல் இந்தியாவில் அதிக அளவில் பேஸ்புக் பயனாளர்கள் இருக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சிறப்பம்சமாக வாட்ஸ்அப் அமைப்புடன் பணப்பரிவர்த்தனை மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க ஜியோ நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இதற்காக ஜியோ கம்பெனி உடன் கிட்டத்தட்ட 43 ஆயிரம் கோடி பணத்தை அந்நிய முதலீடாக செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இதனால் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் பேஸ்புக் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும்.

உலக அளவில் தன்னுடைய கம்பெனிகளை நிலைநாட்ட கூகுள் போன்ற பெரிய கம்பெனிகளுடன் பேசிவந்த ஜியோ நிறுவனம் இறுதியில் பேஸ்புக் நிறுவனத்துடன் கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.