Tamil Nadu | தமிழ் நாடு
பேஸ்புக்கை புரட்டிப்போட்ட ஹேக்கர்கள்.. எம்மாடியோ! தலை சுற்றி போன மார்க்
உலகத்திலேயே மக்கள் அதிகமாக நேரங்களை செலவிடுவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
எவ்வளவு தொழில்நுட்பம் இருந்தாலும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஹேக்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்து உள்ளனர். இந்த செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பக்கங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பாதுகாப்பு வளையங்களை தகர்த்தெறிந்து ஹேக்கர்கள் செயல்பட்டதால் மிரண்டு போயுள்ளனர் சமூக வலைத்தள நிறுவனங்கள்.
‘Our Mine’ என்ற ஹேக்கர்கள் ட்விட்டர் கணக்கில் இருக்கும் ஃபேஸ்புக் பக்கங்களை, இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் ஹேக் செய்துள்ளனர். இதனை ஃபேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளதாம். ஆனால் உடனே அதை திரும்பப் கைப்பற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
‘Our Mine’ ஹேக்கர்கள் உலக அளவில் உள்ள பல பிரபலங்களின் பக்கங்களை ஹேக் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக கூகுள் CEO சுந்தர் பிச்சையின் பக்கங்களும் அடங்கும்.
இவர்கள் குறிக்கோள் செய்திகளை திருடுவது இல்லையாம், ஆனால் எவ்வளவு பெரிய இணையதளமாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பதை உறுதி செய்வதாம். அதனால அவா அவா சேப்டியை அவா அவா தான் பாத்துக்கணும்!
