மூக வலைதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் சீன் (20). தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த 23 வயது நிரம்பிய மாணவிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தங்களது ஜாதகத்தை பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் ஜாதகத்தை வைத்து ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்தாராம் அந்த மாணவி. அதில், திருமணம் நடந்தால், குழந்தை பாக்கியம் இருக்காது என்று ஜோதிடர் சொல்ல, உடனே அந்த காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஐ.பி.எல் கோப்பை வேணும்னா இந்த வருடமே வாங்கிக்கோங்க.. அடுத்த வருஷம் சி.எஸ்.கே வருது!

இதனால், கடுப்பான ஐசக், என்னை திருமணம் செய்யாவிட்டால், என்னிடம் உள்ள உன்னுடைய ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி நடந்தவற்றை வீட்டில் தெரிவிக்க, பின்னர், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஐசக் சீனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.