இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் ஃபேஸ்புக் தளத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் “எக்ஸ்பிரஸ் Wi-fi”  என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்காக பார்த்தி ஏர்டெல் நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தொலைதூரப்பகுதிகளில் உள்ளவர்கள் கூட இன்டர்நெட் வசதி பெற்று தொடர்பிலேயே இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஃப்ரீ பேசிக்ஸ், கனெக்டிவிட்டி லேப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஃபேஸ்புக் நிறுவனம் உலக நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

எக்ஸ்பிரஸ் Wi-fi ஆப் பதிவிறக்கம் செய்து கொண்டால், மிகக் குறைந்த நெட்வொர்க் உள்ள இடங்களிலோ அல்லது நெட்வர்க் கிடைக்காத இடங்களில் கூட இன்டெர்நெட் வசதியை பெறலாம். இதற்காக இந்தியாவில் 20,000 இடங்களில் ஹாட் ஸ்பாட் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா, கென்யா, தான்சான்யா, நைஜீரியா மற்றும் இந்ந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்த வசதி  விரைவில் அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூரி கூறுகையில், இந்தியாவின் கடைகோடி மக்களும் பயன் பெறும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இனைந்து மக்களுக்கு   இணைய சேவை வசதியை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.   இந்திய அரசின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத முயற்சியாக இது அமையும் என்றார்.

Today we're expanding Facebook Express Wi-Fi in India. Together with Bharti Airtel, we’re going to launch another 20,000 hotspots. Express Wi-Fi is one of our projects to help more people get online. Anyone can run an Express Wi-Fi hotspot, which means entrepreneurs across the country can offer their communities faster and more affordable internet. Rohit added Express Wi-Fi to his family’s restaurant. He’s serving a lot more students these days, and they’re staying for longer. "Good food and good internet" seem to be pretty universal requirements for students everywhere. When people like Rohit extend the internet to their communities, they open up opportunities for others. We've helped connect more than 50 million people to the internet through programs like this, and we're looking forward to hearing more stories like his.

Posted by Mark Zuckerberg on Thursday, May 4, 2017