Connect with us
Cinemapettai

Cinemapettai

face-fig-friuts

Lifestyle | வாழ்க்கைமுறை

முக பருக்களையும், முடி உதிர்வையும் தடுக்கும் ஒரே பழம்..! எப்படி பயன்படுத்துவது இயற்கை வைத்தியம்!

முக பருக்களையும், முடி உதிர்வையும் தடுக்கும் ஒரே பழம்..

இன்றைய காலகட்டத்தில் நாம் உபயோகித்து வரும் ஷாம்பு, சோப்புகள் அனைத்திலும் கெமிக்கல் கலந்து இருப்பதால் பல நோய்களுக்கு உள்ளாகிறோம். இதனால் பலவிதமான தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவி வருகின்றது அதனை தடுப்பதற்கு ஒரு சில இயற்கையான மருந்துகளை நாம் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

fig-fruits

fig-fruits

அதில் மிகச் சிறந்த ஒரு பலவகையான அத்திப்பழத்தை வைத்து முகப்பருக்களையும் மற்றும் முடி உதிர்வதையும் தடுக்கலாம். இளம் வயதில் நாம் அனைவரும் முகப்பருவினால் பலவிதமான இன்னலுக்கு உள்ளாகி இருக்கும். இது ஆண் மற்றும் பெண்களுக்கு டீன் ஏஜ் வயதை எட்டி விட்டனர்  என்பதற்கான இயற்கையான அறிகுறிகள் தான்.

முகப்பருவை எப்படி எளிதில் குணப்படுத்துவது எப்படி என்பதை இப்போது காணலாம்,

அத்திப்பழம் – 1

தேன்- 1 டீஸ்பூன்

fig-honey-fruits

fig-honey-fruits

செய்முறை:  அத்திப் பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் முகத்தில் அதனை போட்டு 15 நிமிடம் காய வைக்க வேண்டும் பின்பு மிதமான சூட்டில் தண்ணீரால் நன்கு தூய்மையாக துடைக்க வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறையாவது செய்தால் முகப்பரு உடனடியாக குறைந்துவிடும்.

இந்த பழத்தை வைத்து முகத்தின் அழுக்குகளை நீக்கிக் கொள்ளலாம். இரண்டு அத்திப்பழத்துடன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் மற்றும் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து நன்கு அரைத்து விடவேண்டும், அரைத்த பின்பு அதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து  கழுவிவிட வேண்டும் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி விடும்.

hairfall

hairfall

இயற்கையாகவே முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அத்திப்பழத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் முடி உதிரும் பிரச்சனை நிரந்தரமாக இயற்கையாகவே குணமாகிவிடும்.  இந்த பழம் இயற்கையின் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

இது போன்ற இயற்கையான நாட்டு வைத்தியங்களை கற்றுக்கொள்வது மிக சிறந்த விஷயமாகும் அதுமட்டுமல்லாமல் நம் தலைமுறைகளுக்கும் அதை கற்றுக்  கொடுக்கலாம். இது மட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவிற்கு இணையாக உடல் உழைப்பு முக்கியமானதாகும் அதனை தினமும் செய்து வந்தால் முகம் பொலிவாக காணப்படும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top