Connect with us
boomerang-movie

தமிழில் வெளிவரும் முதல் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ படம் “எழுமின்”. விவேக் ஹீரோ. ஹீரோயின் இவரா ??

vivek

News | செய்திகள்

தமிழில் வெளிவரும் முதல் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ படம் “எழுமின்”. விவேக் ஹீரோ. ஹீரோயின் இவரா ??

தமிழில் முதல் சோம்பி படம், விண்வெளிப்படம் என்ற இந்த வரிசையில் வெளிவருகிறது  முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படமான “எழுமின்”.

வி.பி.விஜி இந்த படத்தை தயாரித்து, எழுதி, இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆன ‘உரு’ படத்தை தனது ‘மையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்தவர் விஜி. இவர் சில நாட்களுக்கு முன்னரே தன் ட்விட்டர் பக்கத்தில் நிறுவனத்தின் இரண்டாவது படத்தை தானே இயக்கப்போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வந்தது .

இந்த எழுமின் படத்தில் நாயகனாக விவேக், மற்றும் நாயாகியாக தேவயானி நடிக்கின்றனர். நிறைய குழந்தை நட்சத்திரங்களும் இப்படத்தில் உள்ளனர். இந்த படத்திற்கு வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை கார்த்திக் ராம் கவனிக்கிறார்.இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.  இன்றிலிருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top