ஏற்கனவே பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மேலும் ஒரு ஷாக் கொடுத்துள்ளனர். அதில் அமிர்தாவின் பிறந்தநாளுக்கு பல சர்ப்ரைஸ்களை கொடுக்க காத்திருந்த எழிலுக்கு பேரதிர்ச்சி கிடைத்தது. அதாவது தன் கணவனை இழந்து மாமியார் மாமனாரையும் கவனித்து வரும் பெண்ணாக அமிர்தா கதாபாத்திரம் அமைந்துள்ளது. இவரை முதலில் கண்டதும், தான் எடுக்கும் ஷார்ட் பிலிம்மில் நடிக்க வைக்க வேண்டும் என்று எழில் விரும்புகிறார்.
அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தா உடன் நட்பாக பழகி அவரை தனது ஷார்ட் பிலிம்மிலும் நடிக்க வைத்து அதில் வெற்றியும் எழில் கண்டார். மேலும் எழில் அமிர்தா உடனும் அவர் குடும்பத்துடனும் நன்றாக பழக ஆரம்பித்து விட்டார். அதிலும் அமிர்தா கணவனை இழந்தவர் எனவும் அறிந்து கொண்டார்.
ஒருகட்டத்தில் அமிர்தா உடன் இருந்த நட்பு சிறிது சிறிதாக எழிலுக்கு காதலாக மாறி வருகிறது. இவ்வளவு நாள் கனவிலே காதலித்த எழில் அமிர்தாவிடம் காதலை சொல்வதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அமிர்தாவுக்கு பிறந்தநாள் வருகிறது அதற்கான பிளான்களைப்பற்றி அமிர்தாவிடம் கேட்கிறார் எழில். அதற்கு அமிர்தா தன் அம்மா முக்கியமான விஷயம் பேச நாளை வரப்போவதாக தெரிவிக்கிறார்.
உடனே எழிலும் அவரின் நண்பரும் அமிர்தா எழிலைப் பற்றி தான் தன் தாயிடம் கூற போகிறார் என மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் திடீரென அமிர்தா ஒரு குழந்தையைக் காட்டி தனது மகள் என்றதும் எழில் அதிர்ந்து போனார். அப்போது குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவிடம் எப்படி காதலை தெரிவிக்க போகிறேன் என்று மனக் கலக்கத்துடன் எழில் அமிர்தா வீட்டிலிருந்து சோகமாக கிளம்பிவிட்டார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவை பார்த்த பிறகு நிச்சயம் அமிர்தாவை எழில் ஏற்றுக்கொள்வார் என்பது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் கருத்துக் கணிப்பாக இருக்கிறது. இனி பாக்கியலட்சுமி சீரியலில் எவ்வாறெல்லாம் மாற்றம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.