ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சைக்கோவை மிஞ்சிய கணேஷ்.. பொண்டாட்டியை தேடி பரிதவிக்கும் எழில்

Baakiyalakshmi Serial : விஜய் டிவியில் பிரைம் டைமில் பாக்யலட்சுமி தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் அமிர்தா மற்றும் நிலாவை பொய் சொல்லி வீட்டுக்கு வர வைத்து கணேஷ் காரில் கடத்தி செல்கிறார். அவர்களை பின் தொடர்ந்து சென்ற பாக்யா ஒரு கட்டத்திற்கு மேல் எங்கு சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனடியாக தனது மகன் எழிலுக்கு போன் செய்து நடந்த விஷயங்களை கூறுகிறார். இதை அடுத்து தனது வீட்டுக்கு வந்து பாக்யா விஷயங்களை கூறும் போது எல்லோரும் ஏன் அமிர்தாவை அங்கு அழைத்து சென்றாய் என்று திட்டுகின்றனர். அதன் பிறகு எழில் அமிர்தாவை தேடி செல்கிறார்.

இந்நிலையில் ஒரு பாலடைந்த பங்களாவில் அமிர்தா மற்றும் நிலாவை கடத்திச் சென்று உள்ளார் கணேஷ். அங்கு அமிர்தாவிடம் நம்ம வாழ்ந்த பழைய வாழ்க்கையை நினைத்துப் பாரு. இனிமே நாம் சந்தோஷமாக வாழ்வோம் என்று கணேஷ் கூறுகிறார், ஆனால் அமிர்தா பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்.

Also Read : அர்ஜூனுக்கு பல்பு! கலிவரதனுக்கு ஆப்பு! ஆனந்த கண்ணீரில் தமிழும் சரஸ்வதியும்

பழசு எல்லாத்தையும் மறந்துடுங்க, இப்ப எனக்கு வேற வாழ்க்கை இருக்கு என அமிர்தா கெஞ்சுகிறார். சைக்கோவையே மிஞ்சி அளவுக்கு அமிர்தா மற்றும் நிலா மீது உள்ள அன்பால் கணேஷ் வெறி பிடித்தது போல் நடந்து கொள்கிறார். இந்த கோபத்தால் என்னென்ன விளைவு நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

அதோடு இவர்கள் இருக்கும் இடத்திற்கு எழில் தேடி செல்லும் நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. கணேஷ் இப்போது அமிர்தாவுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலைக்கு வந்து விட்டார். ஆகையால் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் பாக்கியலட்சுமி தொடரில் வர இருக்கிறது.

Also Read : சிங்க பெண்ணே: ஆனந்தியை கவிழ்க்க மித்ரா வீசிய சூழ்ச்சி வலை.. கை கொடுத்து காப்பாற்றுவானா அழகன்?

- Advertisement -

Trending News