வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

கோபி விரித்த வலையில் சிக்கிய எழில்.. பாக்யாவிற்கு எதிராக வாரிசுகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் கில்லாடி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் சேர்ந்திருப்பதால் தொடர்ந்து நல்லா ஆட வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் ஒரு டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று கல்லூரியில் இருந்து சொல்லி விட்டார்கள். இதனால் எப்படியாவது அம்மாவிடம் சொல்லி சம்மதத்தை வாங்க வேண்டும் என்று இனியா, வீட்டில் இருந்து பாக்யாவிற்கு ஐஸ் வைத்து நைசாக பேசுகிறார்.

கடைசியில் பாக்கியா, உனக்கு என்ன வேண்டும் ஏன் இப்படி கொஞ்சி பேசுகிறாய் என்று கேட்கிறார். உடனே இனியா டான்ஸ் பிராக்டிஸ் பண்ண வேண்டும் என்பதால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று என்னுடைய கல்லூரியிலிருந்து சொல்லி விட்டார்கள். அதற்கு தான் உன்னுடைய சம்மதம் வேண்டும் என்று பாக்கியாவிடம் கேட்கிறார்.

உடனே பாக்யா உனக்கு எதுக்கு டான்ஸ் மாஸ்டர் நீ தான் நல்ல ஆடுகிறாய். தொடர்ந்து நீ தனியாக ப்ராக்டிஸ் பண்ணி டான்ஸ் பண்ணுவதாக இருந்தால் பண்ணு இல்லையென்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் காலேஜுக்கு போனஇனியா தனியாகவே ப்ராக்டிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் அங்கே இருக்கும் இனியாவின் டீச்சர் உங்க வீட்டில் நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லி விடுகிறார்.

இதனை அடுத்து கோபியின் ரெஸ்டாரண்டுக்கு நண்பர் மற்றும் அவருக்குத் தெரிந்த நண்பரும் வந்திருக்கிறார்கள். அப்படி பேசும் பொழுது அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதற்கு ஏத்த மாதிரி கதையை தேடிக் கொண்டிருப்பதாகவும் கோபியிடம் சொல்கிறார். உடனே கோபி, எழில் ஒரு நல்ல இயக்குனர். ஏற்கனவே ஒரு படத்தை சக்ஸஸ் ஆக முடிந்திருக்கிறார்.

அவனிடம் இன்னொரு கதையும் இருக்கிறது அதனால் நீங்க போய் அவனை பார்த்து பேசுங்கள். அவன் என்னுடைய மகன் தான் ஆனால் வீட்டில் பிரச்சனைகள் இருப்பதால் நான் தான் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று இப்போதைக்கு தெரிய வேண்டாம் என சொல்லி விடுகிறார். அதன்படி அந்த தயாரிப்பாளரும் எழிலை பார்த்து பேசி படம் இயக்குவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கப் போகிறார்.

இப்பொழுது தெரியாவிட்டாலும் படம் நல்லபடியாக முடிந்த பிறகு இதற்கெல்லாம் காரணம் கோபி தான் என்று தெரிய வரப்போகுது. அப்பொழுது நிச்சயம் எழில், கோபி பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவுடன் சந்தோசமாக நடந்த விஷயத்தை சொல்கிறார் . அதாவது என் பிள்ளைகளுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நான் தான் கூடவே இருந்து தீர்வு காண்கிறேன்.

இனியாவிற்கு பிரச்சனை, செழியன் பிரச்சினை தற்போது எழில் பிரச்சனையும் தீர்த்து விட்டேன். நான் தான் ஒரு சிறந்த அப்பா என்று பெருமைப்படுத்தி பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ராதிகா சும்மா புலம்பாமல் பேசாமல் தூங்குங்கள் என்று சொல்லி விடுகிறார். ஆனாலும் கோபி, பாக்கியாவிற்கு எதிராக ஒவ்வொரு வாரிசுகளையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டே வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News