Connect with us
Cinemapettai

Cinemapettai

dmk admk

Tamil Nadu | தமிழ் நாடு

இணையத்தில் பித்தலாட்டம் செய்த எதிர்க்கட்சியின் செயல் அம்பலம்.. பரபரப்பான தகவல்!

நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் எதிர்கட்சியான திமுக இணையத்தில் வாயிலாக ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற பரப்புரையை துவங்கி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது.

ஏனென்றால் திமுக கூறி தான் அனைத்து திட்டங்களையும் ஆளும் கட்சி நிறைவேற்றுகிறது என ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில், தற்போது ‘werejectadmk’  என்கின்ற வலைதளத்தை உருவாக்கி, அதில் லைவ் டிராக் என்ற பெயரில் அதிமுகவை நிராகரிப்போரின் எண்ணிக்கையையும், அதிமுகவை நிராகரிக்கும் கிராமங்களின் எண்ணிக்கையையும் அந்த இணையப்பக்கத்தில் காண்பிக்கப்படுகிறது.

இதுக்கெல்லாம் மேலாய் ஒவ்வொரு முறையும் இந்த பக்கத்தை புதுப்பிக்கும் போதும் அதிமுகவை நிராகரிப்போரின் எண்ணிக்கையும், கிராமங்களின் எண்ணிக்கையும் லாஜிக்கே இல்லாமல் உயர்ந்து கொண்டே வருகிறது.

dmk-cinemapettai

எனவே திமுக ஒரு மென்பொருளை புகுத்தி அதன் மூலம் கண்துடைப்பு நாடகத்தை ஆடுகிறது. இதனை மக்களின் தீர்ப்பு என்றும் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.

தற்போதைய நவீன காலத்தில் மென்பொருள்களை பயன்படுத்தி மக்களை வழக்கம் போல் ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பில் திமுக செயல் அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாமல் மக்களை குறுக்குவழியில் மூலம் ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிக்கும், எதிர்க்கட்சியின் நரித் தந்திரம் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த இணையதளம் பதிவானது, தமிழகத்தில் இருக்கும் ஒரு கட்சி இணையதள பிரச்சாரத்திற்கு ஏன் பீகாரில் பதிவு செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் தற்போது என தொடங்கி உள்ளது.

DMK-cinemapettai

இதேபோல் தான் ஏற்கனவே ‘எல்லோரும் நம்முடன்’ என்ற செயலின் மூலம் திமுக இணைய வழி ஆள்சேர்ப்பு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அதிலும் பல முறைகேடுகள் இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆகையால் எதிர்க் கட்சியான திமுக, அதிமுகவை முறையாக தேர்தல் களத்தில் எதிர் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கருத்தாகும்.

Continue Reading
To Top