புதுடெல்லி: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில், கோப்பை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம் என பார்க்கலாம்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றில் முதல் இரண்டு இடம் பெற்ற அணிகளுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. அதாவது நாளை மும்பையில் நடக்கும் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், மும்பை, புனே அணிகள் மோதும், இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக ஐதராபாத்தில் வரும் 21ல் நடக்கும் பைனல் போட்டிக்கு தகுதி பெறும்.

இப்போட்டியில் தோல்வியடையும் அணி, 19ல் பெங்களூருவில் நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு செல்லும். அதே நேரம் நாளைமறுநாள், பெங்களூருவில் நடக்கும் தகுதிநீக்க போட்டியில் (எலிமினேட்டர்) மூன்றாவது, நான்காவது இடம்பிடித்த ஐதராபாத், கொல்கத்தா அணிகளில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு செல்லும்.

இந்நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு செல்லும். அதனால், தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு அணிகளான மும்பை, புனே அணிகளுக்கு இரண்டு வாய்ப்புகளும், மூன்றாவது இடம் பிடித்த ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இரண்டு வெற்றிகளும் பைனலுக்கு செல்ல தேவை. இந்நிலையில் முதல் தகுதிச்சுற்று மும்பையில் நடப்பதால், நேரடியாக பைனலுக்கு செல்ல மும்பை அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.