இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டபோது 15.41 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இதனையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் மத்திய அரசு புதிதாக ரூ.500,ரூ.2000 மற்றும் 50, 10 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டு, அச்சடித்து வெளியிடப்பட்டன. இதையடுத்து பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வங்கிக்கு வராத பணத்தை விட புதிய நோட்டுக்கள் அச்சடிக்க கூடுதலாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை இல்லாத இழப்பாக கருதப்படுகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் புதிய நோட்டு அச்சடித்த செலவு கூட தேறவில்லை என்று நிபுணர்கள் குறை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.