Connect with us
Cinemapettai

Cinemapettai

லாரன்ஸுக்கு தேசிய விருது கிடைக்குமா.? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அதிகாரம் செகண்ட் லுக் போஸ்டர்

athigaram vetrimaran lawrence

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாரன்ஸுக்கு தேசிய விருது கிடைக்குமா.? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அதிகாரம் செகண்ட் லுக் போஸ்டர்

ராகவா லாரன்ஸ் அவர்களின் வாழ்க்கை நடனத்தில் ஆரம்பித்து நடிகன், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து விட்டார். அதீத கடவுள் பக்தி, சமூக சேவை மறுபுறம் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு உதுவுவது என வேற லெவல் மனிதர் இவர்.

சினிமாவை பொறுத்தவரை காஞ்சனா படம் பெற்று கொடுத்த வெற்றி இவரை பேய் பட ஹீரோவாக மட்டுமே மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டது, அதனை மற்ற வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளார் இவர்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் புதிய படம் “அதிகாரம்” அறிவிப்பு மோஷன் போஸ்டருடன் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘பொல்லாதவன்’,‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார்.

வெற்றியின் முன்னாள் அசிஸ்டன்ட் மற்றும் ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிசட்டை’,‘கொடி’, ‘பட்டாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமன்றி இந்தியிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகளை மலேசியாவிலும், பிற காட்சிகளை சென்னை, மும்பையிலும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வருட இறுதியில் ஷூட்டிங் துவங்குமாம். வெற்றிமாறன் தான் நாயகன் கதாபாத்திரத்துக்கும் லாரன்ஸ் சரியாக இருப்பார் என தேர்ந்தெடுத்தாராம்.

கெடா மீசை, ரத்தம் சொட்ட வெளிவந்த மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போஸ்டரில் லாரன்ஸ் மேலூரை சேர்ந்த தமிழ்வேல் என்ற ரோலில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

athigaram second look

மோஷன் போஸ்டரில் “மஜூலா சிங்கப்பூரா” என இம்மிகிரேஷன் விசா காட்சி இடம் பெற்றதை பலரும் கவனித்துள்ளனர். எனவே இது கமெர்ஷியல் படமாக இருக்காது, நம் தமிழர்கள் சிங்கப்பூர் நாட்டில் சந்தித்த பழைய பிரச்சனை எதையாவது மையப்படுத்தி தான் இருக்கும் என்கின்றனர் நம் நெட்டிசன்கள்.

காத்திருப்போம் அடுத்தடுத்த அறிவிப்புக்காக.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top