சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் தங்கள் பழைய உடலமைப்பை பெறுவதற்கு பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால் அவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்
  • அடிவயிற்றை குறைக்க க்ரஞ்சஸ் உடற்பயிற்சி செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிகளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் கொடுத்தால், அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களின் பாதிப்பு அதிகமாகிவிடும்.
  • சிசேரியன் பிரசவத்திற்கு பின் மெல்லோட்டம் பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும்.
  • பளு தூக்கும் பயிற்சியை சிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கிவிடும்.
  • ஓவர்ஹெட் பிரஸ் எனும் உடற்பயிற்சியின் போது, வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் சிசேரியன் செய்த காயம் சரியாக அதிக தாமதத்தை ஏற்படுத்தும்.
  • சிசேரியன் செய்த பின் கால்களைத் தூக்கும் பயிற்சியை செய்யக்கூடாது. ஏனெனில் அந்த பயிற்சியில் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், அது தையல் போடப்பட்ட இடத்தில் உள்ள இணைப்புத் திசுக்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
அதிகம் படித்தவை:  பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர் வெளிவரும் தேதி மற்றும் கதை தெரியுமா?