fbpx
Connect with us

ஜல்லிக்கட்டு போட்டியில் இப்படியுமா, அதிசிய பரிசு அதிர்ந்த மக்கள்..!

jallikattu

ஜல்லிக்கட்டு போட்டியில் இப்படியுமா, அதிசிய பரிசு அதிர்ந்த மக்கள்..!

பரிசு என்பது போட்டியில் வெற்றிபெறவும், அதில்  இளைஞர்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், திறமைகளை வெளிப்படுத்தவும் வழங்கப்படுகிறது.

ஆனால் பல்வேறு தடைகளை கடந்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன

நாளை ஞாயிற்றுக்கிழமையன்று மாடுவிடும் போட்டி நடக்க உள்ளது. இதில் தமிழக-ஆந்திராவை சேர்ந்த ஏராளமானோர் தங்களது மாடுகளுடன் கலந்து கொள்ள உள்ளனர்.

இப்போட்டியில் அதிக வேகமாக ஓடும் மாடுகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.40 ஆயிரம் என 34 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்களை உற்சாகப்படுத்தும் வகையில் போனஸ் பரிசாக மதுபானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

35வது பரிசாக 2 புல் பாட்டில் மது மற்றும் 2 கோழிகள், 36வது பரிசாக ஒரு புல் பாட்டில் மது மற்றும் ஒரு கோழி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான  நோட்டீஸ் தமிழக எல்லை பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் ஜல்லிக்கட்டு காளை வளர்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top