மீண்டும் சிம்புவுடன் ஜோடி போடும் முன்னாள் காதலி.. வெளிவந்த கிக்கான அப்டேட்

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு உட்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகா. இந்தப் படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ஆகும். இப் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு குடும்ப கதையில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் நடிக்க உள்ளனர். நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இதையடுத்து தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகளை இயக்குனர் ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரையும் அணுகி உள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து வாலு என்ற படத்தில் நடித்தனர்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். காதலால் பிரிந்தாலும் தங்கள் நட்பை தொடர்ந்து வந்த இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் இணைய உள்ளனர்.

simbu-hansika-cinemapettai
simbu-hansika-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்