இந்திய அணியின் கோடீஸ்வர கேப்டன் தோனி, சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சாதரண ஊழியராக வேலை செய்பவர் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. ஐசிசியால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பை (50 ஓவர், டி-20, சாம்பியன் டிராபி ) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர். இவர், முன்னாள் பிசிசிஐ தலைவரான சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

கடந்த 2015ல் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இந்த தடை இந்த ஆண்டுடன் முடிகிறது.

அதிகம் படித்தவை:  மேகா ஆகாஷ் , சிம்ரன் தொடர்ந்து ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த அடுத்த ஹீரோயின் ... அதிகாரபூர்வ தகவல் !

 

இந்நிலையில், முதல் ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட கோடிகளை சுட்டுவிட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக வாழும், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, சீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸில் இருந்து தோனிக்கு கடந்த 2012ல் வழங்கிய ஆப்பர் லெட்டரை வெளியிட்டுள்ளார். அதில் தோனி மாதமாதம் சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  சொந்த மகளை கொலை செய்து, பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூரன்..!

தவிர, தோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175ம் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை தோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு உலககோப்பைக்கு வென்ற கொடுத்த பின், பேட் ஒப்பந்தம் மூலம் மட்டுமே தோனி சுமார் ரூ. 12 கோடிகளை பெற்றார் என அனைவருக்கும் தெரியும். ஆனால், 2012ல் தோனிக்கு சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கூலிக்காரன் என ஆப்பர் லெட்டர் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.