fbpx
Connect with us

எல்லாம் சரி இந்தியா பேட்டிங் நினைச்சாதான் பயமாருக்கு! ஆஸ்திரேலியா வீரர் வேதனை..

News / செய்திகள்

எல்லாம் சரி இந்தியா பேட்டிங் நினைச்சாதான் பயமாருக்கு! ஆஸ்திரேலியா வீரர் வேதனை..

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்பொழுது சிறப்பாக விளையாடி வருகின்றனர் தற்சமையம் ஒரு மாபெரும் வெற்றியை தந்துள்ளனர்.இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் வரிசையை பார்த்தால் தான் கொஞ்சம் பயமா இருக்கு என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய பிரசிடெண்ட் லெவன் அணியை ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை பயமுறுத்தும் விதத்தில் உள்ளதாக, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டோனிஸ் கூறுகையில்,’இந்திய அணிக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பயமுறுத்தும் விதத்தில் உள்ளது. அந்த அணியின் எந்த வீரர் எப்போது கொந்தளிப்பார் என கணிக்க முடியாது. ரோகித் விட்ட கோலி, கோலி விட்டா, தோனி என வரிசை மிகவும் பலமாக உள்ளது.’ என்றார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top