நடிகர் ஸ்ரீமன் மிக உயர்ந்த இடத்துப் பிள்ளை. இவரின் அப்பா நினைத்தால் வருடம் இரண்டு படங்கள் பண்ணலாம். அதுவும் தனது மகன் ஸ்ரீமன் ஹீரோவாக வைத்தே பண்ணலாம்.

ஒரு பாதாம் தயாரிக்கவும் செய்தார் அப்பா. சரி மேட்டருக்கு வருவோம். ஸ்ரீமன் அறிமுகம் ஆன படம் விக்ரம் நடித்து பாலா இயக்கிய முதல் படமான சேது.

அதில் படம் முழுக்க நண்பனாக வந்து அசத்தி இருப்பார். இதில் ஒரு சுவாரசியம் என்ன தெரியுமா..? சேது படத்திற்கு முன்பே ஜென்னியும் இவரும் நண்பர்கள்.

விக்ரமின் செல்லப் பெயர் ஜென்னி. அது மட்டுமல்ல, இளைய தளபதி விஜய் துவங்கி இன்று லீடிங்கில் இருக்கும் அத்தனை ஹீரோவும் ஸ்ரீமன்க்கு மிக மிக நெருங்கிய நண்பர்கள்.

அதிகம் படித்தவை:  காலா அறிமுக காட்சிக்கு எந்த ஸ்டைலில் இசை அமைத்தால் உங்களுக்கு பிடிக்கும் ? ரசிகர்களிடம் கேட்ட இசையைமைப்பாளர்.

ஆனாலும், இவர் இன்னும் பெரிய அளவில் வளர முடியவில்லை என்பது பெரும் சோகம். காரணம் என்ன தெரியுமா..? திரையுலகில் நெருங்கிய நண்பர்களை வளர விடவே மாட்டார்கள் என்கிற ஒரு கூற்று உண்டு.

ஸ்ரீமன் கேரக்டரும் நண்பர்களிடம் போய் உதவி, வாய்ப்பு என்று கேட்கும் ஆளும் இல்லை. நட்பு என்றால் பிரதிபலன் எதிர்பாராத நட்பு மட்டுமே.

குறிப்பாக இளையதளபதி விஜய்க்கு சகலமும் இந்த நண்பன் தான். பார்ட்டி,பப், நல்லது, கெட்டது என ஒரு வெல்விஷர் ஸ்ரீமன்.

அதிகம் படித்தவை:  என்ன ஒரு பிரம்மாதமான டான்ஸ்.! வைரலாகும் பியூட்டி குயின் அடா சர்மா டான்ஸ் வீடியோ

ரசிகர்மன்ற கட்டமைப்பு பணிகளில் ஸ்ரீமன் பங்களிப்பு அபாரம் என்பார்கள். ஆனாலும் இன்னும் துண்டு துக்காடா கேரக்டர்கள் மட்டுமே இவருக்கு வந்து கொண்டிருப்பது ஒரு மகா சோகம்.

பார்ட்டி, பங்க்ஷன் என்றால் பெரிய ஹீரோக்கள் முதலில் அழைப்பது இவரைத்தான். அங்கு ‘சகலமும்’ இவர் கண் முன் தான் நடக்குமாம்.

அப்படி ஒரு ‘பக்கா’ ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அமைதியாக வேடிக்கை மட்டும் பார்ப்பார்.

நட்பு என்றால் உயிரையும் கொடுக்கும் அபாரமான இந்த நடிகருக்கு ஏதோ ஒரு மோதிரக் கை காத்திருகிறது.

அப்படி மாட்டினால் ஸ்ரீமன் கொடி தமிழ் திரையில் உயரப் பறக்கும்..!