நடிகர் விஷால் தனது மணப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் எனக் கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

vishal

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமானார். அதிரடியான ஆக்‌ஷன் நாயகனாக பல வெற்றி படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு முக்கிய இடம் உருவாகி இருக்கிறது. கடைசியாக மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புதிரை படத்தில் நடித்து இருக்கிறார். படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சங்கத்தில் இளம் நாயகர்கள் துணையோடு களமிறங்கிய விஷால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று நிர்வாகி பொறுப்பையும் ஏற்றார். அதே வேகத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு வென்றார். இதனால், தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். 40 வயதாகும் விஷால் நடிகர் சங்க கட்டடம் முடிந்ததும், அதன் மண்டபத்திலேயே திருமணம் செய்து கொள்வேன் என ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.

விஷால் தனது நீண்ட கால தோழியான வரலட்சுமியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது. இருவரும் இதுவரை அதனை மறுத்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அடிக்கடி திடீர் செல்பிக்களாலும், ஒருவருக்கான மற்றவரின் காதல் வசனத்தாலும் சமூக வலைத்தளத்தாலும் வைரலாகி விடுவார்கள். நடிகர் சங்க தேர்தலில் விஷால் எதிர்த்தது வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான சரத்குமாரை தான் என்பதால் இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு தரப்பு தெரிவித்தது. ஆனால், தன் தாயிற்காக விஷாலை வைத்து சரத்குமாரை பழி தீர்த்ததே வரலட்சுமி தான் என ஒரு தரப்பும் பேசிக்கொண்டனர். ஆனால், என்ன வேணாலும் பேசிக்கோங்க என்ற ரீதியில் அமைதியை மட்டுமே காத்து வருகிறது இருதரப்பும்.

vishal
vishal

இந்நிலையில், இரும்புத்திரை வெற்றி விழாவில் பேசிய விஷால், என் எதிர்கால திட்டம் அரசியல் என்பதால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். ஜனவரியில் நடிகர் சங்க கட்டட பணி முடிந்துவிடும். அதனை தொடர்ந்து வரும் முகூர்த்த நாளிலே திருமணம் செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வர இருக்கும் அப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறினார். சமீபத்தில், வரலட்சுமி தனக்கு கிடைத்த பொக்கிஷம் என விஷால் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here