Connect with us
Cinemapettai

Cinemapettai

ever-green-actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எய்ட்ஸ் வதந்தியால் வாழ்க்கையை இழந்த மைக் பார்ட்டி.. நடிகையால் வந்த வினை

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு வசூலில் டப் கொடுத்தவர் மைக் பார்ட்டி என்றால் மிகையாகாது. அது என்னவோ தெரியவில்லை அன்றையகால இளைஞர்களுக்கு மைக் பார்ட்டியை மிகவும் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய வெற்றிகளைப் பெற்றது.

இதனால் ரஜினி, கமல் படங்களை கூட மைக் பார்ட்டியின் படம் வரும்போது வெளியிட மாட்டார்கள் என்பது உண்மை. மைக் முதன்முதலாக 1983 ஆம் ஆண்டு அறிமுகமானார். அறிமுக படமே அதிரிபுதிரி வெற்றியை பெற்றது.

இதனால் தொடர்ந்து பல படங்களில் கமிட் செய்யப்பட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபங்களை கொடுத்தது. முக்கியமாக இவர் பட பாடல்கள் அனைத்தும் இன்றுவரை அனைவருக்கும் ஃபேவரிட் ஆக உள்ளது.

இதனால் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த மைக் பார்ட்டியை பிரபல பூ நடிகை ஒருவர் ஒருதலையாக காதலித்தார்.

நடிகையின் காதலுக்கு மைக் பார்ட்டி மறுப்பு தெரிவித்ததால் அந்த நடிகை அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என பரப்பி விட்டு விட்டார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த தமிழ் சினிமா உலகம், அவரை படங்களில் கமிட் செய்வதை நிறுத்தி விட்டனர். மேலும் நடிகைகள் பயந்துகொண்டு மைக் பார்ட்டியுடன் நடிக்க மறுத்து விட்டனர்.

தற்போது உள்ள இணையதள வசதிகள் எதுவும் இல்லாததால் பத்திரிக்கைகளில் எழுதுவதையே உண்மை என நம்பி வந்த காலகட்டம். தொடர்ந்து பத்திரிகைகளில் மைக் பார்ட்டியை பற்றி தவறாக எழுத அவரது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகினது.

மேலும் தன்னுடைய குடியிருப்பு பகுதிகளில் கூட நிம்மதியாக வாழ முடியாத மைக் பார்ட்டி, தனது சொந்த வீட்டை விற்று விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது வரை அவர் ஆரோக்கியமான உடலுடன் நன்றாகத்தான் உள்ளார். மைக் பார்ட்டியின் பெயர் புகழை கெடுப்பதற்காகவே செய்யப்பட்ட சதி என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காலம் கடந்தபின் உண்மை தெரிந்து என்ன பயன் என தலையிலடித்துக் கொள்கிறாராம் மைக் பார்ட்டி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top