‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பரபரப்பாக தயாராகி வரும் படங்கள் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’. இந்த இரண்டு படங்கள் ஆகும்.

இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடங்களில் அக்ஷய் குமார், சுதன்ஷு பாண்டே நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ பார்ட் 1 ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. புரமோஷனுக்காக படத்தின் போஸ்டர்ஸ் பொறிக்கப்பட்ட ஹாட் ஏர் பலூனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பறக்கவிட்டனர்.rajini-2-0-poster

இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸாம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது, படத்தின் மேக்கிங் வீடியோ பார்ட் 2-வை இன்று (அக்டோபர் 7-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் (அக்டோபர்) துபாயிலும், நவம்பர் மாதம் டீஸர் வெளியீட்டை ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரையிலர் ரிலீஸை சென்னையிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.

ரஜினியின் கபாலி படம் வெளிவந்து பல சாதனையை படைத்தது அதைவிட பிரமாண்ட சாதனைபடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.அதுமட்டும் இல்லாமல் 2.0 ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடுவதால் சண்டை காட்சிகள் அனைத்தும் அற்புதமாக வரும்.

எது எப்படியோ அடுத்த ஆண்டு பிரமாண்டமாக படம் வெளிவரும் அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்கிறார்கள் என்று அனைவரும் அறிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here