செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இந்தியன் 2 கைவிட்டாலும், தூக்கி நிறுத்திய ‘கேம் சேஞ்சர்’.. வரலாற்று சாதனை.. என்ன தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் இந்திய 2 படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்தில், எஸ். ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையில், திரு ஒளிப்பதிவில், ஷமீர் முகம்மது எடிட்டிங் செய்கிறார். இப்படத்தை வரும் ஜனவரியில் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீசாகும் என கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் வசூல் சாதனை படைத்த நிலையில், ராம் சரண் பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்துள்ளர். எனவே அவரது அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்த கேம் சேஞ்சர்

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் வரும் டிசம்பர் மாதம், 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் நடக்கவுள்ளது.

அதாவது, இதற்கு முன்பு எந்த இந்திய படமும் அமெரிக்காவில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தியதில்லை என்பதால் அந்த வரலாற்று சாதனையை கேம் சேஞ்சர் படம் படைக்கவுள்ளது. ஏற்கனவே ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷங்கரும் இந்த ஆண்டு எந்தப் படமும் ரிலீசாகாததால் ராம் சரணும் எப்படியும் இப்படத்தை சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் வசூல் குவிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முந்தைய படம் ரூ. 1200 கோடி வசூலித்த நிலையில், இப்படமும் அதேயளவு வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், ஷங்கரும் தன்னை பிரமாண்ட இயக்குனர் என மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News