Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்தை புறக்கணித்த முன்னணி டிவி நிறுவனம்! அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க?
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பல தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் தான் தல அஜித். இவருக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மேலும் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆவதோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகின்றன.
இவ்வாறிருக்க தல அஜித்தின் ஒரு படத்தை கூட, முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பவில்லை என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது. இந்தச் செய்தி தல ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.
அதாவது தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்தின் படத்திற்கான சாட்டிலைட் உரிமையை பெற பல முன்னணி சேனல்கள் போட்டா போட்டி போடுவர்.
இந்த நிலையில் இதுவரை தல நடிப்பில் வெளியான 59 படங்களில் ஒரு படத்தைக்கூட விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது இல்லை என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இதுவரை தல அஜித்தின் ஒரு படத்திற்கான சாட்டிலைட் உரிமையை கூட விஜய் டிவி பணம் கொடுத்து வாங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

vijay-tv
இந்த தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல், தல அஜித்தின் ரசிகர்களை கடுப்பேத்தி உள்ளது.
