Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகலை… எல்லா ஹீரோக்களையும் கரெக்ட் செய்த கைக்குள் போட்ட அறிமுக நடிகை!
படத்தில் கூட நடித்த ஹீரோ அந்த ஹீரோயினை புகழ்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் நடிக்கப் போகும் ஹீரோக்களும் ஒரு ஹீரோயினை புகழோ புகழ் என்று புகழ்வதில் என்ன லாஜிக் இருக்க முடியும். எல்லாம் ஹீரோயினின் மேஜிக்தான் என்கிறார்கள்.
வனமான படத்தில் அறிமுகமாகிறார் ஒரு வாரிசு நடிகை. இவர் அடுத்து சண்டக்கோழி நடிகர், இன்னும் இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து சங்கத்துக்காக நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்தப் பட அறிமுக விழாவிலும் நடிகையை எல்லோரும் புகழ்ந்தனர். ஹீரோயின் அறிமுகமாகும் படத்தின் ஹீரோ ஜெயமான நடிகருக்கு இவர்கள் எல்லோரும் நண்பர்கள். எனவே தனது ஹீரோ மூலமாக ஏற்கனவே பேசி இந்த ஹீரோக்களுடன் நட்பை வளர்த்துக்கொண்டாராம் நடிகை. அதுதான் இந்த பாராட்டுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
சீக்கிரமே நம்பர் ஒன் ஆகிடும் போல இந்த பாப்பா என்று சிரிக்கின்றனர்!
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
