வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குணசேகரன் இல்லாததால் கதிர் மற்றும் ஞானம் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்று அந்த வீட்டில் இருக்கும் பெண்களை பயங்கரமாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் என்னதான் குணசேகரன் வில்லன் கேரக்டரில் பெண்களை அடிமைத்தனமாக நடத்தி வந்தாலும் பார்ப்பவர்கள் மூஞ்சி சுழிக்கும் படி இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருந்தது.

ஆனால் இந்த கதிர் மற்றும் ஞானம் செய்கிற ஒவ்வொரு விஷயங்களும் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. இந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்கிறார்களே என்று புலம்பிக்கொண்டு மக்கள் அவர்களுடைய வெறுப்புகளை கொட்டி தீர்த்து வருகிறார்கள். முக்கியமாக நேற்று எபிசோடில் ஞானம், ரேணுகாவிடம் ரொம்பவே திமிராக பேசிய போது சைலண்டாக இருந்து கதிர் சிரித்த சிரிப்பு கொடூர வில்லத்தனமாக இருந்தது.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

போதாக்குறைக்கு குணசேகரனின் அம்மா தற்போது மாமியார் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவருடைய பங்குக்கு அந்த வீட்டில் உள்ள மருமகள்களை ஆட்டிப் படைத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இதுவரை கரிகாலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது இவருடைய சகுனி வேலையை ஆரம்பித்து சண்டையை இழுத்து விடுவதால் இவரை வெறுக்கும் படி ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், சும்மா எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நின்னு மல்லு கட்டுவதாகவும் தான் கதை நகர்ந்து வருகிறது. இதை பார்ப்பதற்கு அந்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லை. எங்களுக்கு இந்த நாடகமும் பிடிக்கவில்லை என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: குணசேகரன் கேரக்டரை வள்ளலாக மாத்தி குளோஸ் செய்த எதிர்நீச்சல்.. மருமகள்களை ஆட்டிப் படைக்க வரும் அண்ணன்

ஆக மொத்தத்தில் குணசேகரன் இல்லாததால் தற்போது எதிர்நீச்சல் சீரியல் டம்மியாகி கொண்டே போகுது. ஒரு நேரத்தில் எப்படி இருந்த சீரியல் இப்படி ஆகிவிட்டதே என்று மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கூடிய விரைவில் கதைகளத்தை மாற்றி மக்களுக்கு பிடித்த மாதிரி கொண்டு வந்தால் அப்போதாவது இந்த நாடகம் சூடு பிடிக்குதா என்று பார்க்கலாம்.

அத்துடன் கூடிய சீக்கிரத்தில் குணசேகரன் கேரக்டரை கொண்டு வந்து, நாடகத்துக்கு வலு சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் இந்த நாடகத்தில் நடிக்கும் கதிர் உடைய பேச்சை கொஞ்சம் குறைத்துக் கொண்டு வந்தால் பார்ப்பவர்களுக்கு பிபி எகிறாது. அந்த அளவிற்கு கதிர் உடைய நடவடிக்கை எரிச்சல் அடைய வைக்கிறது. போற போக்க பாத்தா எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதை விட்டு விடுவார்கள் என்பது போல் தெரிகிறது.

Also read: வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்