2 மத்திய அரசு வேலைகளையும் உதறித் தள்ளிய எதிர்நீச்சல் குணசேகரன்.. உச்சாணி கொம்பில் இருக்கும் வாத்தியார்

ethirneechal serial Gunasekaran character vela ramamoorthy has turned down 2 central govt jobs: தமிழ் சினிமாவில் இளம் தலைமுறைகள் பலவும் வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், விடாமுயற்சியின் பலனாக வயதை ஒரு தடையாக எண்ணாமல் போராடி வெற்றிக்கனியை எட்டிப் பிடித்திருக்கிறார் ஒரு நடிகர். 

ஆயுதம் செய்வோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், ஜிவி பிரகாஷ் குமாரின் மதயானைக் கூட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். 

திரையில் முறுக்கு மீசையும், கோபத்தனத்துடன் கூடிய வஞ்சகப்  பார்வையால் ரசிகர்களை மிரட்டும் இந்த தென்னாட்டு நாயகன் இயல்பிலேயே பலருடனும் இனிமையாக பழகக் கூடியவராம். 

அவர் வேறு யாரும் அல்ல தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் வேலராமமூர்த்தி தான்.

சின்னத்திரை தொடர்களில் கிட்டத்தட்ட அதிகமான சம்பளத்தை வாங்கி உச்சாணி கொம்பில் இருக்கிறாராம் இந்த முரட்டு வாத்தியார்.

அந்த காலத்தில் பியூசி வரை படித்தவர் இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து பின்பு அதிலிருந்து வந்து அஞ்சலகத்தில் பணிபுரிந்தாராம். அஞ்சலகத்தில் பணிபுரியும் போது தமிழ் மீது இருந்த நாட்டத்தின் காரணமாக பல நாவல்களை எழுத தொடங்கியுள்ளார். 

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நான் அஞ்சலகத்தில் வேலை பார்த்த சம்பளத்தில் பாதியை தன்னை சந்திக்க வரும் நண்பர்களுடன் பேசுவதற்காக தேநீர் கடைக்குச் சென்று அங்கு  செலவிடுகிறேன் என்று கூறியிருந்தார் அந்த அளவிற்கு நண்பர்கள் வட்டம் அதிகமாம். 

வேல ராமமூர்த்தியின் படைப்புகள்

குற்றப்பரம்பரை, குருதியாட்டம், பட்டத்து யானை போன்ற பல  நாவல்களை எழுதியுள்ளார் வேல ராமமூர்த்தி. இவர் எழுதிய பட்டத்து யானை நாவலை காப்பியடித்து தான் கேப்டன் மில்லர் உருவாக்கியுள்ளனர் என அதிரடியாக பல சர்ச்சைகளை கிளப்பினார். 

காப்பி அடிக்கிறவங்க ஒரு அனுமதி கூட கேட்க மாட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளித்த இந்த பிரபலம்,  இன்று வரை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே கிடையாதாம். 

நாள்தோறும் உடற்பயிற்சி, குரல் பயிற்சி என பலவற்றையும்  மேற்கொண்டு வருகிறார் இந்த மண்ணின் மைந்தன். அது மட்டும் இன்றி விவசாயத்தை தெய்வமென நம்பும் இந்த தமிழ் மகனுக்கு விவசாயத்தில் அனைத்து வேலைகளையும் அசால்ட்டாக செய்வாராம். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்