கடவுள் இருந்தா எதுக்கு நாட்டுல இவ்ளோ கெட்டது நடக்குது.. கமல் போல் நாத்திகம் பேசும் எதிர்நீச்சல் குணசேகரன்

Actor Gunasekaran: பொதுவாக தனது உழைப்பின் மீது அதீத நம்பிக்கையை வைத்திருப்பவர் பல விஷயங்களை உதாசீனப்படுத்தி வருவார்கள். அந்த வகையில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் நாத்திகம் பேசுபவர் தான் கமல். பல விஷயங்களில் பகுத்தறிவு பேசிக்கொண்டு தனது உழைப்பின் மூலம் தான் நான் வெற்றியை நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு வருவார்.

அப்படிப்பட்ட இவர் போலவே எதிர்நீச்சல் குணசேகரனும் பேசி இருக்காரு. அதாவது இவரிடம் கடவுள் மீது உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று ஒரு கேள்வியை முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இவர் கொடுத்த பதில், கடவுள் இருந்தா எதுக்கு நாட்டில் இவ்வளவு கெட்ட விஷயங்கள் நடக்கிறது.

Also read: கமல், ரஜினியை எல்லாம் ஓவர் டேக் செய்த ஷாருக்கான்.. மெய்சிலிர்க்க வைத்த கிங் ஆப் பாலிவுட்

முக்கியமாக கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் 100 குழந்தைகள் தீ விபத்தினால் இறந்து போய் இருக்கிறார்கள். அப்பொழுது எந்த ஒரு அதிசயமும் நடக்காமல் போய்விட்டது. அந்த நேரத்தில் என்ன கடவுள் லஞ்ச் பிரேக் எடுத்துக்கிட்டு போயிட்டாரா என்று குதர்க்கமான பதிலை கொடுத்திருக்கிறார்.

அத்துடன் எல்லோரும் வரிசையாக கோவிலுக்கு போய்க்கொண்டு பணத்தை கொட்டிக் கொடுத்து கடவுளை பார்த்துட்டு வரேன்னு சொல்றாங்க. அங்கே எங்க கடவுள் இருக்கிறார். உண்மையான கடவுள் என்றால் யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களை பார்க்கும் பொழுது நம்மளால் முடிந்த உதவியை செய்து அவர்களுடைய கஷ்டத்தை போக்குகிறார்களோ அவர்கள் தான் கடவுள்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

அந்த மாதிரி மனிதர்களை அவ்வளவு எளிதாக யாரும் பார்த்திட முடியாது என்று அடுக்கடுக்காக நாத்திகம் பேசிக் கொண்டு வருகிறார் எதிர்நீச்சல் குணசேகரன். என்னதான் இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயிலுக்கு போக மாட்டீங்களா என்று கேட்டதற்கு, போவேன் சும்மா போயிட்டு வருவேன் என்று பதில் அளிக்கிறார்.

அத்துடன் எதிர்நீச்சல் சீரியலில் முழுவதுமாக ஆத்தா மீனாட்சி என்று கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு விஷயங்களையும் செய்து தருகிறார். அது நடிப்பு என்றாலும் பணத்திற்காக இவருடைய கொள்கையை மாற்றிக்கொண்டு நேரத்துக்கு தகுந்தார் போல் பல விஷயங்களை செய்கிறார். ஆனால் இவருடைய வெற்றிக்கு என்னதான் விடாமுயற்சி காரணமாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தலைகனத்துடன் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து பேசுவது எந்த விதத்தில் சரியாகும்.

Also read: பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்