3 நாள் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து ரிலீசான இந்த படம் மக்களை கவர்ந்ததா என்பதை பார்ப்போம். ட்விட்டரில் ஒரளவு பாசிட்டிவ் கருத்துகளே வந்தன.

அதனை பார்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் சண்டைக் காட்சிகளும், பின்னணி இசையிலும் இமான் மிரட்டியிருக்கிறார். படத்திற்கு பாசிட்டிவ் என்று பார்த்தால், சண்டை காட்சிகள், காமெடி காட்சிகள், எடுத்துக்கொண்ட கதை கரு போன்றவற்றை கூறலாம்.

இவற்றை மட்டும் கனகச்சிதமாக செய்திருக்கிறார் பாண்டியராஜ். கண்ணபிரான் என்னும் வக்கீல் கதாபாத்திரத்திலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தட்டிக் கேட்பதிலும் சூர்யாவின் நடிப்பு அட்டகாசம். சத்யராஜ் குசும்புக்கார அப்பாவாகவும், சரண்யா பாசமான தாயாகவும் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூரி, புகழ் ஆங்காங்கே வந்தாலும் இளவரசு, தேவதர்ஷினி கூட்டணியில் படம் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை கதை கருவாக பாண்டிராஜ் கையில் எடுத்தாலும். படம் வெளிவருவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகியும் பல சொதப்பல்களை சந்தித்து சூர்யாவிற்கு ஒரு சறுக்கல் ஏற்படுத்தி உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் சொதப்பலாக கையாண்டிருக்கிறார் யாரா இருந்தாலும் பரவாயில்லை, பெண்களுக்கு ஏதாவது கொடுமை ஏற்பட்டால் அங்கேயே தட்டி கேட்க வேண்டும் என்று பாண்டியராஜ் சொல்லியிருப்பது அருமையிலும் அருமை.

படத்தில் பின்னணி இசையைத் தவிர பாட்டுக்கள் அனைத்தும் கொஞ்சம் மொக்கை தான். வில்லனாக நடித்திருக்கும் வினய் கூட பணக்கார தோற்றம் மட்டுமே, நடிப்பில் ரசிகர்களை கவரவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. இறுதிக்காட்சியில் வினய்யை டம்மி பீஸாக ஆக்கிவிட்டனர். மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களின் கருத்து படி சூர்யாவிற்கு தோல்வி படமாகாமல் சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய படம் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் காட்சிகளை குறைப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாம். இதனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சினிமா பேட்டை ரேட்டிங் – 2.25 / 5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்