Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முக்கிய அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்.. அதுக்குள்ள இப்படியா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. கடந்த சில வருடங்களாக ஒரு பெரிய வெற்றி கொடுத்த தடுமாறி வந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அவருக்கு செம கம்பேக் படமாக அமைந்தது.

இருந்தாலும் தியேட்டரில் சூர்யாவின் வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் தியேட்டருக்காகவே உருவாகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் வருகின்ற தீபாவளிக்கு அமேசான் தளத்தில் நேரடியாக ஜெய்பீம் என்ற படம் வெளியாக உள்ளது. இப்படி தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டு பக்கங்களிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.

தற்சமயம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பக்கா கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெறும் 51 நாளில் மொத்த படப்பிடிப்பையும் வெயில் மழை பாராமல் முடித்துவிட்டதாக படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு முன்னணி நடிகரின் படம் கடந்த சில வருடங்களில் மிக வேகமாக முடிந்தது இந்த படம் தான்.

படம் வளர்ந்து வரும் வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்தாண்டு பொங்கலுக்கு எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது. காரணம் சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த படம் ஏற்கனவே தீபாவளியை உறுதி செய்துள்ளது.

pandiraj-cinemapettai

pandiraj-cinemapettai

Continue Reading
To Top