Videos | வீடியோக்கள்
நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன் டா.. சிம்புவின் மிரட்டலாக வந்த டிரைலர்
சிம்பு நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, பாலசரவணன் போன்றவர்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ஒரு சிலர் டீஸரில் சிம்பு கையில் வைத்திருந்த பாம்பை பார்த்து. சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தனர்.
அதற்கு படக்குழு சிம்பு கையில் வைத்திருக்கும் பாம்பு நிஜம் அல்ல, அது ஒரு டம்மி பாம்பை வைத்துதான் நாங்கள் படக் காட்சிகளை எடுத்துள்ளோம். பின்பு விப்எக்ஸ் மூலம் நிஜ பாம்பாக மாற்றியதாக தெரிவித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
மாஸ்டருக்கு போட்டியாக ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த இரண்டு படங்களுமே புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சிம்பு ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
