58 கிலோ எடையுள்ள கவர்ச்சி ஆடையை அணிந்த 44 கிலோ எடையுள்ள நடிகை.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர் நடிகை எஸ்தர் அனில். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை எஸ்தர் தற்போது ஹீரோயினாக நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு வருவார். சில சமயங்களில் கவர்ச்சி போட்டோக்களையும் பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. ஆடையில் அப்படி என்ன சிறப்பு அம்சம் என்று தானே கேட்கிறீர்கள்.

esther-anil-cinemapettai
esther-anil-cinemapettai

நடிகை எஸ்தர் அணிந்துள்ள ஆடையின் எடை சுமார் 58 கிலோவாகும். ஆனால் எஸ்தரின் எடை வெறும் 44 கிலோ தான். தன் உடல் எடையைவிட 14 கிலோ அதிகமான எடை கொண்ட ஆடையை அணிந்து அதில் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது எடை 44 கிலோ என்று இருக்கும் நிலையில் 58 கிலோ உடை அணிந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றும், இந்த உடை மிகவும் பிடித்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில், இந்த புகைப்படமும், வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்