புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தப்பிக்குமா? கங்குவாவை Washout செய்ய நவம்பரில் ரிலீஸாகும் புதிய படங்கள் லிஸ்ட் இதோ!

சூர்யாவின் கங்குவா படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான படங்கள் கங்குவாவுக்குப் போட்டியாக இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால், அவற்றிற்கு கங்குவாவே பரவாயில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறியதால், கங்குவா இன்னும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் 29 ல் கங்குவாவுக்கு போட்டியாக மேலும் 9 புதிய படங்கள் ரிலீசாகவுள்ளன. அவற்றைப் பற்றி இதில் பார்க்கலாம்.

சொர்க்க வாசல்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில், பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கும் படம் சொர்க்க வாசல். இப்படத்தில் பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதை லோகேஷ் கனகராஜூம் பாராட்டியிருந்தார். இப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் யூ

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் பார்த்து பார்த்து கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் சித்தார்த். இதைத்தொடர்ந்து, ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் மிஸ்யூ. அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கன் நடித்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லவ் ஜர்னரில் இப்படம் உருவாகியுள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

பரமன்

விவசாயிகளைப் பற்றிய படமாக உருவாகியுள்ள பரமன் படம். இதில் சூப்பர் குட் சுப்பிரமணி ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து, பழ கருப்பையா, வையாபுரி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சபரீஸ் இயக்கி தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 29 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது.

மாயன்

ராஜேஷ் கண்ணா இயக்கத்தில், பிரியங்கா மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாயன். இப்படம் உலகின் பேரழிவு, உலகம் உருவானது ஆகியவற்றைப் பற்றி உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

திரும்பிப்பார்

வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், பிக்பாஸ் டானி உள்ளிட்ட பலரின் நடிப்பில், இப்ராஹிம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரும்பிப்பார். இப்படத்தை கிரிதரன் தயாரித்துள்ளார். இப்படம் ஷேடோ வாக் என்ற போர் தந்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது.

சாதுவன்

விஜய் விஸ்வா நடிப்பில் உருவாகி வரும் படம் சாதுவன். ஹீரோயினாக ரஷ்மிதா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து கலையரசன், இளங்கோ, காசி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள்னர். ஒரு இரவில் நடக்கும் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. சந்தோஷ் சேகரன் எழுதி இயக்கியுள்ள இப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

டப்பாங்குத்து

கிராமிய கலைகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம். இதில், ஹீரோவாக சங்கர பாண்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து தீப்தி ராஜ், காதல் சுகுமார், ஆண்ட்ரிவ், துர்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சரவணன் இசையமைத்துள்ளார். வரும் 29 ஆம் தேதி இப்படமும் ரிலீஸாகிறது.

அந்த நாள்

ஹீரோவாக ஷாம், ஹிரோயினாக ஆதியா பிரசாத் நடித்துள்ள படம் அந்த நாள். இப்படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார். ரகு நந்தன் தயாரித்துள்ளார். சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பே ஷூட்டிங் முடிந்திருந்தாலும் இப்படமும் நவம்பர் 29 ஆம் தேதிதான் ரிலீஸாகவுள்ளது.


- Advertisement -

Trending News