‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என தற்போது 4 படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா. மனிதர் செம்ம பிஸி. இந்தப் படங்களைத் தொடர்ந்து  சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.

புசு புசுவென்று இருந்த ஹன்சிகா தன் உடலை மிக ஸ்லிம்மாக மாற்றினார். பிரபுதேவாவுடன் இணைந்து  குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. வேறு  புதுப்படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யாமல்  இருந்து வந்தார். இந்நிலையில் அதர்வாவுக்கு ஜோடியாக  நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

முதலில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.

விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை பல படங்களை விநியோகம் செய்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யோகி பாபு காமெடியானாக நடிக்கிறாராம். இந்த படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் படம் நெடுக வருவதுபோன்ற  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர் யூ டியூப்  தளத்தில் ‘எரும சாணி’ என்ற பெயரில் உள்ள சேனலில் வருபவர்.

வீடியோக்களில் நடித்த இவரும் ஹரிஜாவும் இன்றைய இளசுகளின் மத்தியில் மிக    பிரபலமானவர்கள் . முன்னணி கதா நாயகனுடன் இவர் நடிக்கும் முதல் படம் இது.