Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனராகும் எரும சாணி புகழ் விஜய்.. முதல் படத்திலேயே வாய்ப்பு கொடுத்த பெரிய நடிகர்
தற்போது சினிமாவைவிட யூடியூபில் நடிப்பவர்கள் வெகுபிரபலமாகி வருகின்றனர். பல யூடியூப் சேனல்கள் இருந்தாலும் இளைஞர்களுக்கு ஃபேவரிட் என்றால் அது எரும சாணி சேனல் தான். யதார்த்தமாகவும் இன்றைய கால நடைமுறையை காமெடியாக சொல்லி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள்.
யூடியூபில் இருந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி படத்தின் மூலம் காமெடியனாக திரையில் அறியப்பட்டவர் விஜய். நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல் பெற்றவர். அதுமட்டுமில்லாமல் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் எருமசாணி புகழ் விஜய் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த கதையில் பிரபல நடிகர் அருள்நிதி நடிக்க இருக்கிறார். அருமையான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான அருள்நிதி இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இப்போது இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே யூடியூப் சேனலில் இருந்து கார்த்திக் என்பவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
