Tamil Nadu | தமிழ் நாடு
ஆட்சியிலும்,கட்சியிலும் அசுர பலத்துடன் ஈ.பி.எஸ்.. பின்வாங்கும் ஓபிஎஸ்.! பரபரப்பில் அதிமுக
ஆட்சியிலும் கட்சியிலும் ஈ.பி.எஸ்-கை ஓங்கி நிற்பதால், கலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் உள்ளனர். இன்று மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து பல முக்கியமான உறுப்பினர்கள் வெளியேறி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் தன்னை நம்பி வந்தவர்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லை.
ஆனால் ஈ.பி.எஸ் தரப்பில் கிளை கழக நிர்வாகிகள் தொடங்கி மாநில அளவிலான நிர்வாகிகள் வரை முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் செய்து முடித்துள்ளார்.
ஈ.பி.எஸ் இதனால் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஈ.பி.எஸ்-யின் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக இருந்த எம்பி லட்சுமணன் திமுகவில் இணைந்து குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நத்தம் விஸ்வநாதன், செம்மறை கேபி, முனுசாமி போன்றவர்கள் ஈ.பி.எஸ் பக்கம் ஆதரவு தெரிவிப்பதாக கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்காண்டு காலங்களில் சசிகலாவை பற்றியும் ஈ.பி.எஸ் எந்த இடத்திலும் சிறு விமர்சனம் கூட செய்ததில்லை.
இதை வைத்துப் பார்த்தால் அதிமுகவில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்களும் கூட ஈ.பி.எஸ் பக்கம் நிற்க தொடங்கி விட்டார்களாம்.
இன்று நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ஈ.பி.எஸ் கை ஓங்கி நிற்பதால் ஓ.பி.எஸ் தரப்பு சற்று பின் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
