Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் கதை தான் சர்காரா? லீக்கான பகீர் தகவல்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படம் தற்போதைய அரசியல் சூழலின் உண்மை கதையை தான் பேச இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படத்தின் பெயர் துப்பாக்கி. ராணுவ அதிகாரியாக விஜய் நடத்த அந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இதையடுத்து, இந்த ஜோடி இணைந்த படத்துக்கு கத்தி என தலைப்பு வைத்தனர். அப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படமும் ஆக்‌ஷன் மற்றும் சமூக பிரச்சனையை பேசி அனைவரிடத்திலும் அப்ளாஸை பெற்றது.

இவர்கள் இணைந்து இருக்கும் மூன்றாவது படம் விஜயின் 62வது படமாகி இருக்கிறது. இப்படத்திற்கு சர்கார் எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் அரசியல் சார்ந்த கதை தான் பின்னணியாக அமைக்கப்பட்டு இருப்பதாக ஒரு புதிய தகவல்கள் இணையத்தில் உலா வர தொடங்கி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்து இருக்கிறது. அப்புகைப்படத்தில் அரசியல்வாதிகளாக நடிக்கும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி பேனர்கள் அதிகம் தென்படுகிறது. மேலும் ஒரு புகைப்படத்தில் இருந்த கட்அவுட்டில் இவர்களின் போட்டோக்கள் இருபுறமும் இருக்க நடுவே ‘இணைப்பு விழா’ என எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தையே பலருக்கு சர்கார் படத்தின் பின்னணி குறித்து பொரித்தட்டி இருக்கும். அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை இந்தப் படம் பேசும் என்று தெரிகிறது.

ஆனால், விஜய் இப்படத்தில் அரசியல் தலைவராக நடிக்கவில்லை. அப்போது அவர் கதாபாத்திரம் என்ன என்ற கேள்வி தோன்றுமே? இப்படத்தில் விஜய் ஒரு பெரிய பணக்காரராக நடிக்கிறார். வெளிநாட்டில் செட்டிலான விஜய் தன் மக்களுக்காக எதாவது செய்ய சொந்த மாநிலத்திற்கு திரும்புகிறார். மக்களுக்கு அவர் சேவை செய்வது பிடிக்காத அரசியல்வாதிகள் அதைத் தடுத்து நிறுத்தி அவரிடம் இருக்கும் அத்தனை செல்வங்களையும் இழக்க வைப்பார்களாம்.

இந்த பிரச்சனையை எப்படி உடைத்து விஜய் தன் கடமையை செய்தார் என்பதே சர்காராக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். இதனால், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்ப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், காவலன் படத்தில் இருந்து பிரச்சனையை சந்தித்து வரும் விஜய் பட பட்டியலில் சர்காரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top