Tamil Nadu | தமிழ் நாடு
அதிமுக-வின் அடுத்த முதல்வர் வேட்பாளார் யார் தெரியுமா.? திக்கு முக்காட செய்யும் இணையதள வாக்கெடுப்புகள்
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற சலசலப்பு அதிமுகவின் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையில் நேற்று காரசாரமான விவாதம் செயற்குழு கூட்டத்தில் நடந்துள்ளது.
மேலும் முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது எடப்பாடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
பிரபல இணையதள பத்திரிகை வெளியிட்டுள்ள வாக்கெடுப்பின்படி , ‘அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும்?’ என்ற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை குறிப்பிட்டுள்ளனர். ஓபிஎஸ் அவர்களுக்கு மிக குறைந்த ஓட்டுகள் கிடைத்துள்ளது.
‘ஒருவேளை பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?’ என இணையதள பத்திரிக்கைகள் எழுப்பிய கேள்விக்கு, ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலக அதிக வாய்ப்புள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றைய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு வந்த ஓபிஎஸ் தனது வாகனத்தில் உள்ள தேசியக்கொடியை பணியாளர்களிடம் கழட்ட சொன்னார். இது மக்களின் மனதில் ஓபிஎஸ் பற்றிய எண்ண ஓட்டத்தின் பிரதி பிம்பமாக பார்க்கப்படுகிறது.

admk-eps-vote
2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற போது, ஓரிரு மாதங்களில் ஆட்சியை கலைத்து விடுவார் என்று கூறிய அனைத்து வாயும் அடைத்து போகும் அளவிற்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடியார்.
